இந்தியா

பிழைப்புக்காக பேசுபவர்: மோடியைப் பழித்த ஓவைஸிக்கு அமைச்சர் நாக்வி குட்டு

ஏஎன்ஐ

பிரதமர் நரேந்திர மோடியை பழித்துப் பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஆசாதின் ஓவைஸிக்கு மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக ஓவைஸி பேசும்போது,  "மோடியால் கோயிலுக்குச் செல்ல முடியும் என்றால். நம்மால் மசூதிக்கு செல்ல முடியும். மோடி ஒரு குகையில் தியானம் செய்வார் என்றால் நம்மால் நமது மசூதியில் பெருமிதத்துடன் தொழுகை செய்ய முடியும்.

300 சீட்களுக்கு மேல் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வது என்பது பெரிய விஷயம்தான். இந்தியாவில் அரசியல் சாசனம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதனால் பாஜகவின் 300 சீட்களால் நமது உரிமைகளைப் பறிக்க இயலாது" எனப் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள முக்தார் அப்பாஸ் நக்வி, "சிலர் தங்கள் பிழைப்புக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். சிலர் மதன், சாதி, பிராந்தியம் அடிப்படையில் தேவையற்ற பேச்சுக்களை உதிர்பார்கள்.

இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மோடி 130 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. மோடி ஆட்சியின் கீழ் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை மக்களே உணர்வார்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும் மோடியைப் புகழ்ந்து பேசிய நக்வி, "மோடி அவர்கள் 130 கோடி மக்களின் வளர்ச்சிக்கும் எவ்வித பேதமுமின்றி உழைக்கிறார். அவர் தன்மானத்துடன் இனைந்த வளர்ச்சி பற்றி பேசுகிறார். அதனால்தான் அவர் சாதி, மதம், பிராந்திய எல்லைகளைக் கடந்து பெருமையுடன் நிற்கிரார். எல்லாத் தடைகளையும் தகர்த்து அவர் வளர்ச்சிக்கான பாதையை அமைத்திருக்கிறார்.

விவசாயிகளும் இளைஞர்களும்தான் மோடி அரசின் கீழ் முக்கியத்துவம் பெறுகின்றனர். கடந்த ஆட்சியிலும் இளைஞர்கள், விவசாயிகள் மீது கவனம் செலுத்தினோம். கடந்த காலம் விடுத்த சவாலை சமாளிக்க இந்த ஆட்சியில் முயற்சி செய்வோம்.

மோடியின் தத்துவம் எடுத்த வேலையை முடிப்பதே தவிர சவால்களைக் கண்டு ஓடுவதில்லை. தீவிரவாதிகள், ஊழல், விலைவாசி உயர்வுக்கு எதிராக என்ன செய்தாரோ அதையே மற்ற பிரச்சினைகளுக்கு எதிராகவும் செய்வார்" எனப் பேசினார்.

SCROLL FOR NEXT