ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரமாக செல்லும் வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
ஏற்கெனவே அமலில் உள்ள மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு விதிமுறைகள் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. அந்த சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த புதிய மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:
| குற்றம் | தற்போதைய சட்டப்படி அபராதம் | புதிய சட்டப்படி அபராதம் |
| சீட் பெல்ட் | ரூ.100 | ரூ. 1,000 |
| ஹெல்மெட் | ரூ.100 | ரூ. 1,000+ 3 மாதங்கள் லைசென்ஸ் இழப்பு |
| ஆம்புலன்ஸூக்கு வழிவிடாவிட்டால் | தண்டனை இல்லை | ரூ.10000 |
| லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் | ரூ.500 | ரூ.5000 |
| மது அருந்து விட்டு வாகனம் ஓட்டினால் | ரூ.2000 | ரூ.10000 |
| லைசென்ஸ் ரத்து செய்த பிறகு வாகனம் ஓட்டினால் | ரூ.500 | ரூ.10000 |
| அதிக வேகம்/ ரேஸ் | ரூ.500 | ரூ.5000 |
| கூடுதல் சுமை | ரூ. 2000 + டன்னுக்கு ரூ. 1000 | ரூ. 20000 + டன்னுக்கு ரூ. 2000 |
| சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் | தண்டனை இல்லை | பெற்றோர்/ உரிமையாளருக்கு ரூ. 25,000 அபராதம் 3 ஆண்டுகள் சிறை |