நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 90 கோடி வாக்காளர்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் ரூ.60 ஆயிரம் கோடி செலவிட் டுள்ளதாகவும் இது கடந்த 2014 தேர்தலை விட இரண்டு மடங்குக் கும் அதிகம் என்றும் டெல்லியை சேர்ந்த ‘சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ்’(சிஎம்எஸ்) தெரிவிக் கிறது.
கள ஆய்வு, பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், அரசியல் கட்சிகள் ஒரு வாக்காளருக்கு ரூ.700 அல்லது ஒவ்வொரு மக்களவை தொகுதிக் கும் சுமார் ரூ.100 கோடி செல விட்டுள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.
சில தொகுதிகளில் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் உள் ளனர். இது ஜமைக்கா நாட்டு மக்கள் தொகைக்கு சமமாகும். விளம்பரம் மற்றும் பிரச்சாரத் துக்கு வேட்பாளர்கள் அதிகம் செலவிடுகின்றனர். சிலர் வாக் காளர்களுக்கு பண வினியோகம் செய்கின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சம் ரூ.70 லட்சம் வரை மட்டுமே செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் வேட்பாளர்கள் இதைவிட பல மடங்கு செலவு செய்கின்றனர்.
இந்நிலையில் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவு ரூ.1 லட்சம் கோடியை கடக்க வாய்ப்புள்ளது என சி.எம்.எஸ். தலைவர் என்.பாஸ்கர ராவ் கூறினார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல. தேர் தலில் உலகில் மிக அதிகத் தொகை செலவிடப்படும் நாடாகவும் உள்ளது.