வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெங்களூரு நகரத்தின் சர்ச் தெருவில் உள்ள மதுபான விடுதியில் குடித்து விட்டு 2ம் மாடியிலிருந்து கீழே விழுந்த 2 ஐடி நிறுவன ஊழியர்கள் பலியானதாக போலீஸார் சனிக்கிழமையன்று தெரிவித்தனர்.
பலியான் இருவர் பவன் அத்தாவர், வேதா ஆர்.யாதவ் ஆகிய இருவர் என்று போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சர்ச்தெரு ‘பப்’ ஒன்றில் நன்றாக மது அருந்திய இந்த 2 நபர்களும் 2ம் மாடியிலிருந்து இறங்கிய போது தடுக்கி விழ படிக்கட்டின் முடிவில் இருக்கும் ஜன்னல் வழியாக கீழே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
30 வயதுப் பக்கம் இருக்கும் இருவரையும் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கு மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக அறிவித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
வெள்ளி நள்ளிரவு போலீஸ் கமிஷனர் அலோக் குமார் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது கர்நாடகா நீதிமன்றம் சப்தம் போட்டு கூச்சலிடும் நள்ளிரவு மதுபான விடுதிகளைக் கண்காணிக்க உத்தரவிட்டதையடுத்து நடவடிக்கைகளுக்காக அவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதனையடுது மதுபான ‘பப்’ உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304-ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது திட்டமிட்ட கொலையல்ல ஆனால் மனித மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.