சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
மகாராஷ்டிரத்தில் அக்டோபர் 15-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாஜக, சிவசேனா இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.
மொத்தமுள்ள 288 தொகுதி களில் பாஜகவுக்கு 119 இடங்கள் ஒதுக்கப்படும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியி ருந்தார்.இதை பாஜக ஏற்க மறுத் துள்ளது. இரு கட்சிகளும் பிடிவாத மாக இருப்பதால் 25 ஆண்டுகால கூட்டணி உடையக்கூடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்பட வில்லை. எனினும் பாஜக தரப்பில் தொகுதிகளை விட்டுக்கொடுக்க முன்வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை யின்படி பாஜகவுக்கு 125 தொகுதி கள் ஒதுக்கப்படலாம் என்று கூறப் படுகிறது. தொகுதிப் பங்கீடு தொடர் பான இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோடிக்கு ஆதரவாக சிவசேனா
இதனிடையே சிவசேனாவின் சாம்னா தலையங்கத்தில் ‘‘முஸ்லிம்கள் தேசப்பற்றை பாராட்டி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதன்மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை அவர் தொடங்கியுள்ளார். சிலர் தீவிர வாதத்தில் ஈடுபடலாம். அதற்காக முஸ்லிம்கள் அனைவரையும் தீவிர வாதிகளாக சித்தரிப்பது தவறு.
பிரதமர் மோடி, முஸ்லிம்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவர்கள் வீணடிக்கக் கூடாது. நமது பிரதமர் அனைத்து சமூகத்துக்கும் சொந்தக்காரர். அவர் யாருக்கும் விரோதி அல்ல’’ என்று கூறப்பட்டுள்ளது.