இந்தியா

அல்-காய்தாவின் இந்திய கிளை அச்சுறுத்தல்: உ.பி.யில் உஷார் நிலை

செய்திப்பிரிவு

இந்தியாவுக்கான அல்- காய்தா கிளை தொடங்கப்பட்டதாக வீடியோ வெளியானதை அடுத்து, உத்தர பிரதேசத்தின் பதற்றம் ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜிஹாத் நடத்த, அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜவாஹிரி பேசிய விடியோ காட்சி, அல்-காய்தா அமைப்பின் ஊடகப் பிரிவான மூலம் சமூக வலைதளங்களில் புதன்கிழமை நள்ளிரவு முதல் ஒளிபரப்பாகியது.

இந்த வீடியோ பதிவு உண்மையானது தான் என்று உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் விழிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. வீடியோ பதிவில் ஜவாஹிரி, குறிப்பிட்ட மாநிலங்களுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக உத்தரப்பிரதேசத்தில் அவ்வப்போது மதக் கலவரங்கள் ஏற்படும் சூழல் உள்ள நிலையில், அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி குறிப்பிடும்போது, "அல் காய்தா மிரட்டலை அலட்சியப்படுத்தாமல் விழிப்புடன் செயல்பட உத்தர பிரதேச காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகளில் உச்சகட்ட பாதுக்காப்பு தேவையோ அங்கு, அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்துறை அமைச்சகம் அலோசனை தெரிவித்துள்ளது. அல் காய்தா விடுத்த சவாலை உறுதியுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, உத்தர பிரதேசத்தின் பதற்றமான மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், வழிபாட்டு தடங்கள், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், வணிக வளாகங்களில் உஷார் நிலையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT