‘கோன் பனேகா குரோர் பதி’ கேம்ஷோவில் முதல் முறையாக ரூ.7 கோடி வென்ற டெல்லி சகோதரர்களுக்கு பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘கோன் பனேகா குரோர் பதி’ டிவி கேம்ஷோவை நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் ‘சீசன் - 8’ தனியார் சேனலில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் பரிசு ரூ.1 கோடியில் இருந்து படிப்படியாக தற்போது ரூ.7 கோடியாக உயர்ந் துள்ளது.
இந்நிலையில் கடந்த வார நிகழ்ச்சியில் டெல்லியைச் சேர்ந்த அச்சின் (28), சர்தாக் நருலா (23) சகோதரர்கள் பல்வேறு துறைகளில் இருந்து கேட்கப்பட்ட 14 கடினமான கேள்விகளுக்கும், 4 லைஃப்லைன்கள் உதவி யுடன் சரியான விடை அளித் தனர்.
இதன் மூலம் அவர்கள் அதிகபட்ச பரிசுத் தொகை யான ரூ.7 கோடியை வென் றனர்.
இத்தொகை இந்தியாவில் வேறு எந்த சேனல் கேம் ஷோவிலும் இதுவரை வழங்கப்படாத அதிகபட்ச பரிசுத் தொகை யாகும்.
பரிசு வென்ற சகோதரர் களை வாழ்த்தி அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
“நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே இவர்கள் போட் டியை அணுகிய விதம் மற்றவர் களுக்கு எடுத்துக் காட்டாக திகழக்கூடியது” என்று அவர் கூறியுள்ளார்.