கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடகு, தலைக்காவிரி, பாக மண்டலா, மடிகேரி, ஷிமோகா ஆகிய இடங்களில் கடந்த 2 நாட் களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை குடகு மாவட்டத்தில் அதிகபட்சமாக 11.4 செ.மீ.மழை பதிவானது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கன மழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தொடரும் கன மழை காரணமாக புதன்கிழமையும், வியாழக்கிழமையும் குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டி ருப்பதால் போக்குவரத்தும் வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேரள மாநிலம் வயநாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 4 தினங் களாக பலத்த மழை பெய்து வருவதால், கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மைசூர் மாவட்டம் ஹெச்.டி.கோட்டை அருகே அமைந்துள்ள கபினி அணைக்கு கடந்த செவ்வாய்க் கிழமையிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து கணிச மாக அதிகரித்துள்ளது.
அணைகளின் நீர்மட்டம்
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வினாடிக்கு 6,500 கன அடி நீர் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு வந்துகொண்டி ருக் கிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை மாலை நிலவரப்படி 120 அடியாக உயர்ந்திருக்கிறது. அணையி லிருந்து வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல கடல் மட்டத்தி லிருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,283.59 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 20,500 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடி நீர் காவிரி நதியில் திறக்கப்பட்டுள்ளது. ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணை களிலிருந்தும் தலா 1,000 கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப் பட்டுள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து 25,000 கன அடி நீர் திறக்கப்பட் டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.