மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் இருந்தபோது ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விரைவில் தனது விசாரணையைத் தொடங்க உள்ளது.
மேக்சிஸின் கிளை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் டுக்கு எதிராக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த குற்றப் பத்திரிகையில் “ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில், ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளுக்கு மத்திய நிதி யமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.