கர்நாடக மாநிலத்தில் திறந்தநிலையில் இருந்த 1.47 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் கடந்த ஒரு மாதத்தில் மூடப்பட்டுள்ளன. செப்டம்பரில் மேலும் ஒரு லட்சம் ஆழ்துளைக் கிணறுகளை மூடத் திட்டமிட்டுள்ளதாக மாநில ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி பாகல் கோட்டையை சேர்ந்த திம்மண்ணா(6) என்கிற 1-ம் வகுப்பு மாணவன் ஆழ் து ளைக் கிணற்றில் விழுந்தான். 8 நாட்கள் கழித்து சிறுவன் பிணமாக மீட்கப் பட்டான். நிலத்தை 160 அடிகள் வரை தோண்டியதால் அரசுக்கு ரூ 1.30 கோடியும் மகனை பறிகொடுத்த ஹனுமந்தப்பாவுக்கு ரூ.5 லட்சமும் செலவானது.
இந்த துயர சம்பவத்தை அடிப்படை யாகக் கொண்டு, ‘திம்மண்ணாவின் கண்ணீர் கதை' என்ற பெயரில் பாகல்கோட்டை மாவட்ட நிர்வாகம் ஆவணப்படத்தை தயாரித்தது. இதனை திரையிடும் நிகழ்ச்சி பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் பேசியதாவது:
‘கர்நாடகத்தில் கடந்த இரு மாதங்களில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இரண்டு குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள். திம்மண்ணா(6) இறந்த துயர சம்பவத்தை கர்நாடக மக்களால் மறக்கவே முடியாது.
நீருக்காக ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பவர்கள்,போதியநீர் கிடைக்கா விட்டால் அதை மூடாமல் அலட்சியமாக விட்டுவிடுகின்றனர். இதில் அப்பாவி குழந்தைகள் விழுந்து பரிதாப மாக பலி ஆகிறார்கள். இதனை தடுக்கின்ற வகையில் கர்நாடக அரசு புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதிலும் திறந்த நிலையில் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதிலும் அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதில் உரிய விதிமுறைகளை பின்பற்றாத அரசு அதிகாரிகளும் நில உடைமையாளர்களும் போர்வெல் லாரி உரிமையாளர்களும் கடுமையாக தண்டிக்கப்பட்டு வரு கின்றனர். இதற்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி தொடங்கப் பட்டுள்ளது. திறந்தநிலை ஆழ்துளைக் கிணறுகளை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மூட வேண்டும் என கர்நாடக அரசு உத்தர விட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் அரசு நிலங்களில் மக்கள் பயன்படுத்தாமல் திறந்த நிலையில் கிடந்த 48,679 ஆழ்துளைக் கிணறு களும் தனியார் நிலங்களில் இருந்த 99,107 ஆழ்துளைக் கிணறுகளும் மூடப் பட்டுள்ளன. மொத்தத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 886 திறந்தநிலை ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. செப்டம்பரில் மேலும் ஒரு லட்சம் ஆழ் துளைக் கிணறுகளை மூட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் ஆர்வலர் களும் பொதுமக்களும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.