கேரளத்தில் ஓணம் உணவுப் போட்டியில் பங்குபெற்ற ஒருவருக்கு, தொண்டையில் இட்லி சிக்கி அடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலக்காட்டில் உள்ள கிராமம் ஒன்றில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கிராம கலைக் குழு சார்பாக உணவுப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. திங்கட்கிழமை நடந்த இந்த போட்டியில் பலர் பங்கேற்றனர்.
போட்டியில் கலந்துகொண்ட பாலக்காட்டை சேர்ந்த கண்டமுத்தன் (55) என்பவர் வேகமாக இட்லி சாப்பிட முயன்றபோது, திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனை அடுத்து, அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் சிகிசைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், அவரது இறப்புக்கு தொண்டையில் இட்லி சிக்கியதே காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.