இந்தியா

2022-க்குள் புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்துவதில் சிக்கல்: மலேசியாவில் 500-ல் 250 புலிகள் வேட்டை

டி.எல்.சஞ்சீவி குமார்

வரும் 2022-ம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்க வகை செய்யும் ‘Tx2’ திட்டத்தின் இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் எண்ணிக்கை மற்றும் மீட்டெடுப்பு தொடர்பான டிராஃபிக் அமைப்பின் இரண்டாவது கூட்டம் (Stocktaking conference of The Global Tiger Recovery Program) வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் ‘Tx2’ எனப்படும் புலி களின் எண்ணிக்கையை இரு மடங் காக உயர்த்தும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து இந்தியா, மலேசியா, தாய்லாந்து, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

‘Tx2’ திட்டத்தின்படி மலேசியாவும் தங்கள் நாட்டில் புலிகளின் எண் ணிக்கையை 500-லிருந்து 1,000-ஆக உயர்த்துவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால், மலேசியா சமர்ப்பித்த ஆய்வுகளின்படி, அங்கு புலிகளின் எண்ணிக்கை சுமார் 500-ல் இருந்து 250 வரை சரிந்தது தெரியவந்தது. கடந்த 10 ஆண்டுகளில் வேறு எந்த நாடுகளிலும் இது போன்று பெருமளவு புலிகளின் எண்ணிக்கை சரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000 முதல் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை புலிகள் வசிக்கும் நாடுகளில் 1,590 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக டிராஃபிக் அமைப்பு சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தது.

அதாவது, வாரத்துக்கு இரண்டு புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளன. தற்போது மலேசியாவில் பாதிக்குப் பாதி புலிகள் வேட்டையாடப்பட் டுள்ளன. இதனால் 2022-ம் ஆண்டில் உலகில் புலிகளின் எண்ணிக்கையை 3,200-லிருந்து சுமார் 6,400 ஆக அதிகரிப்பது என்ற இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “உலக ளவில் புலிகள் எண்ணிக்கை சரிந்திருந் தாலும் இந்தியாவில் கணிசமான அளவு புலிகளின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதாக கூட்டத்தில் தெரிவித்துள்ளோம்.

குறிப்பாக, புதியதாக உருவாக் கப்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், புலிகள் மறு உருவாக்க பிரதேசமான பன்னா புலிகள் காப்பகம் ஆகிய இடங்களில் கணிச மான அளவு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வட இந்தியாவில் கணிசமான காப்பகங்களில் ஆளில்லா விமானங் கள் மூலம் காடுகள் கண்காணிக் கப்படுவதால் அங்கு புலிகளின் வேட்டை கடுமையாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது” என்றனர். இதைத் தொடர்ந்து புலிகள் வசிக்கும் நாடு களில் அவற்றின் பாதுகாப்பு திட்டங் களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

2016-ம் ஆண்டுக்குள் புலிகளின் ஓரளவு துல்லியமான கணக்கெடுப்பு முடிக்க வேண்டும். அவற்றின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும். புலிகள் மறு உருவாக்க பிரதேசங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். புலிகள் - மனிதர் மோதலை குறைக்க வேண்டும் ஆகிய பரிந்துரைகளை டிராஃபிக் அமைப்பு அதன் உறுப்பு நாடுகளிடம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT