இந்தியா

நள்ளிரவில் தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை அடித்து உதைத்த துணிச்சல் பெண்: புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்தார்

இரா.வினோத்

பெங்களூர் மடிவாளா அருகே உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ரினி பிஸ்வாஸ் (25). இவர் மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த 18-ம் தேதி உறவினரின் வீட்டுக்கு சென்ற ரினி, இரவு 11 மணி அளவில் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார்.

இரவு 11.45 மணியளவில் மடிவாளா பிரதான சாலைக்கு அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு “இனிமேல் ஆட்டோ வராது. சாலை சரியாக இல்லை. நீங்கள் வேறு ஆட்டோவில் செல்லுங்கள்” என ரினியிடம் ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். “நள்ளிரவில் இருட்டாக உள்ளதால் தனியாக செல்ல முடியாது. ஆட்டோவில் ஏறும்போது பேசியவாறு, என்னுடைய‌ வீட்டுக்கு அருகே வந்து விடுங்கள்” என ரினி தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ரினியின் கன்னத்தில் அறைந் துள்ளார். மேலும் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து ஆட்டோவிலிருந்து வெளியேற்ற முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரினி, ஆட்டோ ஓட்டுநரை பதிலுக்கு அறைந் துள்ளார். மேலும் அவரது மூக்கிலும் உதைத்துள்ளார். இருப்பினும் ஆட்டோ ஓட்டுநர் அவரை வெளியேற்றிவிட்டு சண்டை போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இருவர் சமாதானம் செய்துள்ளனர்.

இதனிடையே, ஆட்டோவை யும், ஓட்டுநரையும் புகைப் படம் எடுத்துக்கொண்ட ரினி, அவசர போலீஸ் 100-க்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள் ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, அந்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இந்த தகவலை ரினி பிஸ்வாஸின் நண்பர் ஒருவர் பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியின் ட்வீட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார். இதை யடுத்து, கமிஷனர் எம்.என்.ரெட்டி மடிவாளா போலீஸாருக்கு இந்த தகவலை தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரினி பிஸ்வாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஆட்டோ ஓட்டுநர் மீது இந்திய தண்டனை சட்டம் 354-ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ரினி கொடுத்த ஆட்டோவின் பதிவு எண்ணைக் கொண்டு தேடினர். அதனைத் தொடர்ந்து முகமது அலி என்கிற ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT