இந்தியா

சீனாவை எச்சரிக்கையாக கையாள வேண்டும்: காங்கிரஸ்

செய்திப்பிரிவு

சீனாவை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டுமென்று மோடி அரசுக்கு காங்கிரஸ் அறிவுரை கூறியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா கூறியுள்ளது: சீனா விஷயத்தில் இந்தியா எப்போதும் தனது கடந்த கால கசப்பான அனு பவங்களை மறந்துவிடக் கூடாது. நேரு காலம் முதல் வாஜ்பாய் வரை சீனா நம்மிடம் மோசமாகவே நடந்து கொண்டுள்ளது. அவர்களை நாம் எளிதில் நம்பிவிடக் கூடாது. பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தா லும், அவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT