இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக வரும் போலி விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம் என குறித்து இந்திய விமானநிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தேசிய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இத்தகைய விளம்பரங்கள் அதிகாரபூர்வமானவை அல்ல. மற்றும் வேலைக்கான விண்ணப்பங்களை ஏற்க எந்த ஒரு ஏஜென்ஸிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
இந்த மோசடி ஆட்சேர்ப்பு விளம்பரங்கள் மற்றும் மோசடி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் இந்திய விமான ஆணையத்தின்பேரில் பொய்யான தகவல்ளையே தருகின்றன.
எந்த ஏஜென்ஸிக்கோ அல்லது இணைய தளங்களுக்கோ இந்திய விமான நிலையங்களில் காலிப்பணியிடங்களில் பணிநியமனங்களுக்கான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் செய்யவோ அல்லது ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவோ ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
பொதுமக்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறவேண்டாம்.
இவ்வாறு தேசிய விமான நிலையங்களின் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் வேறுபட்ட பகுதிகளில் 120க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இந்திய விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன.