இந்தியா

பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட முடியாது: சிபிஐ கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

எம்.சண்முகம்

2ஜி வழக்கு தொடர்பாக பத்திரிகை மற்றும் ‘டிவி’களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சிபிஐ கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர், சிபிஐ இயக்கு நர் ரஞ்சித் சின்ஹாவை அவரது வீட்டுக்குச் சென்று பலமுறை சந்தித்ததாக சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டது. ரஞ்சித் சின்ஹாவின் வீட்டு பதிவேட் டில் இதுதொடர்பான விவரம் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பொய்யான ஆவணம்

இவ்வழக்கு நீதிபதிகள் எச்.எல்.தத்து, எஸ்.ஏ.பாப்தே அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், “ரஞ்சித் சின்ஹா வீட்டின் பதிவேடு என்று சொல்லப் படும் ஆவணம் பொய்யானது. அப்படி எதுவும் இல்லை. தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள் ளன. அந்த ஆவணம் எங்கிருந்து பெறப்பட்டது, சட்டப்படியான நடைமுறையின்கீழ் பெறப்பட்டதா என்ற விவரத்தை வெளியிட வேண் டும். அவர் குறிப்பிடும் ஆவணத்தை நீதிமன்ற நடைமுறைப்படி பிர மாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து, பதிவேட்டு ஆவணத்தை இணைத்து பிர மாணப் பத்திரமாக தாக்கல் செய்யும்படி, பிரசாந்த் பூஷனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கறிஞர் விகாஸ் சிங் தொடர்ந்து வாதிட்டதாவது:

இந்த குற்றச்சாட்டு தொடர் பான ஆவணத்தை ‘சீல்’ வைக் கப்பட்ட உறையில் நீதிமன்றத் துக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. ஆனால், அதை மீறி பத்திரிகை, தொலைக்காட்சிகளில் இதுதொடர்பான தகவல் வெளி யிடப்பட்டுள்ளது. இது, தனி மனித சுதந்திரத்தை மீறும் செயல். இதன்மூலம், நீதிமன்ற நடவடிக் கைக்கே அர்த்தம் இல்லாமல் போகிறது. பத்திரிகை, ‘டிவி’-களில் இதுபற்றிய செய்தி எதுவும் வெளி யிடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “பத்திரிகை சுதந்திரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. இருந்தாலும், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு களில் அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

வழக்கின் அடுத்த விசா ரணை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏர்செல் மேக்சிஸ்

மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, 2ஜி வழக்கின் விசாரணை அதிகாரி ராஜேஸ்வர் சிங் மாற்றப்பட்ட விவகாரம் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு நிலவரம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர், “இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ராஜேஸ்வர் சிங் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். ஆனால், அதற்கான உத்தரவு இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. அவர் எம்.ஏ., குற்றவியல் துறை பட்டம் பெற்றவர். போலீஸ் மற்றும் சமூக சீர்திருத்தவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 45 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்தது. இதில், ராஜேஸ்வர் சிங்கும் முக்கிய பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்துள்ளது” என்றார்.

ராஜேஸ்வர் சிங் வழக்கு குறித்த முழு விவரங்களையும் சேகரித்து திங்கள்கிழமை நடைபெறும் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT