மேற்கு வங்க மாநிலத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மகனை அவரது தாயே போலீஸில் பிடித்துக் கொடுத்துள்ளார்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் டையமண்ட் ஹார்பர் பள்ளிக்கு அருகே ஒரு சிறுமியை நாஜிர் சேக் என்பவர் வெள்ளிக்கிழமை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
குடிபோதையில் சிறுமியை தான் பலாத்காரம் செய்தது பற்றி, வீட்டுக்கு திரும்பியதும் தனது தாய் அய்நூர் பீவியிடம் நாஜிர் சேக் கூறியுள்ளார். இதுகுறித்து, அய்நூர் பீவி டையமன்ட் ஹார்பர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாக போலீஸ் அதிகாரி ருபந்தர் சென் குப்தா தெரிவித்தார்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி சிறுநீர் கழிப்பதற்காக வகுப்பறையிலிருந்து வெளியே வந்தபோது நாஜிரும் மற்ற 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். அந்தச் சிறுமியை அய்நூர் மீட்டு டையமண்ட் ஹார்பர் மருத்துவமனையில் சேர்த்தார்.
காவல் நிலையம் சென்ற பிறகே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெற்றோருக்கு தெரியவந்தது என சென்குப்தா மேலும் கூறினார்.