கடந்த ஆண்டு போபர்ஸ் ஊழல் தொடர்பாக புதிதான ஆதாரம் கிடைத்துள்ளது ஆகவே ரூ.64 கோடி லஞ்ச வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ டெல்லி நீதிமன்றத்தையும் பிறகு உச்ச நீதிமன்றத்தையும் அணுகியது.
ஆனால் வியாழக்கிழமையான (16-5-19) இன்று இதே டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாங்கள் இந்த வழக்கை மேலும் கொண்டு செல்ல விரும்பவில்லை என்று கூறி அந்தர்பல்டி அடித்துள்ளது.
தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றங்களில் இது தொடர்பாக எதிர்கால திட்டம் என்னவென்பதை பிற்பாடு முடிவு செய்யவுள்ளதாக சிபிஐ தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது. ஆகவே இப்போதைக்கு போபர்ஸ் ஊழல் வழக்கை மேலும் விசாரணை செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதே வழக்கில் மேலும் விசாரணை கோரிய வழக்கறிஞர் அஜய் அகர்வால் தன் மனுவை வாபஸ் பெற விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் தங்கள் நேரத்தை அனாவசியமாக வீணடித்ததற்காக நிச்சயம் கட்டணம் செலுத்த நேரிடும் என்று கோர்ட் எச்சரித்ததையடுத்து தான் இது குறித்து முறையான காரணங்களைத் தெரிவிப்பதாக அஜய் அகர்வால் கூற கோர்ட் இதனை ஏற்றுக் கொண்டது.
கடந்த ஆண்டு போபர்ஸ் ஊழல் தொடர்பாக புதிதான ஆதாரம் கிடைத்துள்ளது ஆகவே ரூ.64 கோடி லஞ்ச வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ டெல்லி நீதிமன்றத்தையும் பிறகு உச்ச நீதிமன்றத்தையும் அணுகியது.
மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பாக ஹிந்துஜா பிரதர்ஸ் மீதான விசாரணை அனைத்தையும் முடிக்குமாறு கூறிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஊக்குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.