இந்தியா

அறிவொளி ஏற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்: மோடி ஆசிரியர் தின வாழ்த்து

செய்திப்பிரிவு

ஓய்வில்லாமல் அறிவொளி ஏற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், "டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு மரியாதையை உரித்தாக்குகிறேன். ஆசிரியர், அறிஞர், தலைவர் என பல தளங்களில் சிறந்தவராக விளங்கிய ராதாகிருஷ்ணன் இன்றளவும் தேசத்திற்கு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்.

ஓய்வில்லாமல் அறிவொளி ஏற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கத்தை உரித்தாக்குகிறேன்" என மோடி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT