இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 122 பேரை மீட்ட ஏர் இந்தியா விமானங்கள்

செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகளில் ஏர் இந்தியா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 44 மாணவர்கள் உள்பட 122 பேர் விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் ஏர் இந்திய விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியிலுள்ள லே மாவட்டத்துக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டது.

ஏர் இந்தியா விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு 27 டன் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன என்று அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT