இந்தியா

தேர்தல் முதல் வெற்றி முடிவை அறிவித்த பெருமையை அடைந்தது  கர்நாடகாவின் ஹவேரி

செய்திப்பிரிவு

2019 தேர்தல் முடிவுகளில் முதன் முதலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரை அறிவித்த வகையில் கர்நாடகாவின் ஹவேறி லோக்சபா தொகுதி சாதனை படைத்துள்ளது.

மற்ற தொகுதிகளை விட விரைவு கதியில் வெற்றி பெற்ற வேட்பாளரை அறிவித்த தொகுதியென்ற பெருமை பெற்றது கர்நாடகாவின் ஹவேரி தொகுதி. அதாவது மதியம் 3.00 மணிக்கு வெற்றியாளரை அறிவித்து விட்டது இந்தத் தொகுதி.

இதனை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஹவேரி லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவகுமார் உதாசி 3வது முறையாக பெரும் வெற்றி பெற்றார். இந்த முடிவுதான் இந்தத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட முதல் வெற்றி முடிவாகும்.

பாஜகவின் சிவகுமார் உதாசி 6,93,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே 2019 தேர்தலில் இந்தியாவின் முதலில் அறிவிக்கப்பட்ட எம்.இ. சிவகுமார் உதாசி ஆவார்.  எதிர்கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாட்டீல் 5,42,778 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

SCROLL FOR NEXT