தனிப்பட்ட பெரும்பான்மையிலும் கூட்டணிக் கட்சியுடனும் சேர்ந்து 2வது முறையாகத் தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி தலைமை பாஜக ஆட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 342 தொகுதிகளில் முன்னிலை வகிக்க காங்கிரஸ் 93 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
டெல்லியில் 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதிலும் 3 வேட்பாளர்கள் 1 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் பர்வாஜ் பாஜகவுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
“ஜனநாயகத்தில் மக்கள் அளிக்கும் தீர்ப்புதான் சக்தி வாய்ந்தது. இந்திய மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். பாஜகவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். எதிர்கால ஆட்சி நன்றாக அமைய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முறை அவர் நற்பணி செய்வார் என்று நம்புகிறோம்” என்றார்.