2019 மக்களவைத் தேர்தலில் 2014-ஐக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது மோடி தலைமை பாஜக கூட்டணி. மின்னணு வாக்கு எந்திர என்பது சுருக்கமாக இவிஎம் என்று அழைக்கப்படுகிறது, இதற்குப் புதிய விளக்கங்களை அளித்து ட்விட்டர்வாசிகள் மகிழ்ந்து வருகின்றனர்.
“EVM Everyone Voted Modi” என்ற புதுவிளக்கம் வைரலாகி வலம் வருகிறது.
அதாவது ‘இவிஎம்-அனைவரும் மோடிக்கு வாக்களித்தனர்’ என்பதை ஆங்கிலத்தில் “EVM Everyone Voted Modi” என்று ஒரு ட்விட்டர்வாசி புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.
இதற்கு மற்றொரு ட்விட்டர்வாசி, “ஆம் நரேந்திர மோடி இவிஎம் எந்திரத்தினால் வெற்றி பெற்றார்” என்று Everyone Voted Modi என்று வழிமொழிகிறார்.
புனீத் சோப்ரா என்ற ட்விட்டர்வாசி, அரவிந்த் கேஜ்ரிவால் இவ்வாறு கூறுவார் என்று ‘எவ்ரிபடி வோட்டட் மோடி’EVM என்று நக்கல் செய்துள்ளார்.
ஏற்கெனவே காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் இவிஎம் எந்திரத்தில் கோளாறு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நால் 22 எதிர்க்கட்சிகளும் சேர்ந்து தேர்தல் ஆணையரைச் சந்தித்து வாக்குகளை எண்ணும் முன் ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு ஒப்பீடு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில் ‘Everyone Voted Modi’ என்ற புது விளக்கம் சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.