இந்தியா

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

செய்திப்பிரிவு

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பது தொடர்பான விதிகளை மறுவரையறை செய்வதுடன், அது தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் அலுவலக விவகாரங்கள், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப் பேற்று 100 நாட்கள் ஆவதை யொட்டி தனது துறையில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக் கைகள் குறித்து ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது தொடர்பான விதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். இது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர உத்தேசித்துள்ளோம்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் தொடர்பான சான்றிதழ் களை பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சுயசான்றொப்பம்

வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக் கப்படும் சான்றிதழ்களில் சுயசான் றொப்பமிடலாம் என்ற மத்திய அரசின் முடிவு, இளைஞர் களுக்கு வரப்பிரசாதமாக அமைந் துள்ளது. இது தொடர்பான முறையான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.

அதேசமயம் தவறான ஆவணங்களுக்கு சுயசான் றொப்பம் அளிப்பதால் ஏற்படும் விளைவுகளை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இனிமேல் பெரும்பாலான அரசுத் துறைகளுக்கு அளிக்கப் படும் ஆவணங்களுக்கு சுயசான் றொப்பம் அளித்தாலே போது மானது என்ற நடைமுறை கொண்டு வரப்படும். ஆனால், பாதுகாப்பு தொடர்பான விவகாரங் களில் அரசிதழில் பதிவு பெற்ற அரசு அதிகாரியிடமோ, நோட்டரி வழக்கறிஞரிடமோ சான்றொப்பம் (‘அட்டஸ்டேஷன்’) பெற வேண்டி யது அவசியமாகும்.

ஓய்வூதியதாரர்கள்

அரசு நிர்வாக நடைமுறை களை மேம்படுத்தவும், எளிமைப்படுத் தவும் கடந்த மூன்று மாதங்களாக முயற்சித்து வருகிறோம்.

அரசு உயர் பதவியி லிருந்து ஓய்வு பெற்ற வர்களின் அனுபவத்தை பயன் படுத்திக்கொள்ளும் வகையில், அவர்களை நிர்வாக சீர்திருத்த குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கவுள்ளோம். தற்போது 31 லட்சம் மத்திய அரசு ஊழி யர்கள் உள்ளனர். 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.

ஆட்சிக்கு வந்த 5 நாட்களில் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் பணிபுரிவதற்கான உத்தரவுகளை வழங்கி, அந்த மாநிலத்தில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்துவதில் விரைவாக செயல்பட்டோம் என்றார் ஜிதேந்திர சிங்.

SCROLL FOR NEXT