இந்தியா

ஒடிசாவில் கரையை கடக்கும் ஃபானி புயல்: சூறைக்காற்று தாக்கும் வீடியோ

செய்திப்பிரிவு

ஒடிசாவில் ஃபானி புயல் மிக பலத்த சூறைக்காற்றுடன் கரையை கடந்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று ஆழ்ந்த, தீவிர காற்றழுத்த தாழ் மண்டலமாக மாறி ஃபானி புயலாக மாறியது. அதிதீவிர புயலாக மாறியுள்ள ஃபானி புயல் கடந்த 43 ஆண்டுகளில் ஏப்ரல் மாதங்களில் உருவானதில் மிகவும் வலிமையானதாகும். கடந்த 1999-ம் ஆண்டுக்குப்பின் உருவான சூப்பர் புயல்களில் மிகவும் வலிமையானது ஃபானி புயலாகும்.

இன்று காலை 8 மணி முதல் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் ஃபானி புயல் கோபால்பூர், சந்தாபாலி பகுதியில் கரையைக் கடந்து வருகிறது. ஃபானி புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 175 கி.மீ முதல் 180 கி.மீ வரை காற்று வீசி வருகிறது. சில இடங்களில் அதற்கும் அதிகமாக வேகத்தில் காற்று வீசி வருகிறது.

இந்தநிலையில் ஒடிசாவை புயல் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்ததின் ஊடக தகவல் பிரிவு இந்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT