தொலைக்கட்சிப் பெட்டியை அணைத்து வைக்கும் நேரமிது; எல்லா கருத்து கணிப்புகளும் பொய்யாக வாய்ப்பில்லை என காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா கூறியுள்ளர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் பாஜக 306 இடங்களைப் பிடிக்கும் என்றும், ரிபப்ளிக் சிவோட்டர் பாஜக கூட்டணி 287 இடங்களைப் பிடிக்கும், நியூஸ் 18 பாஜக கூட்டணி 336 இடங்களைப் பிடிக்கும் என்றும், நியூஸ் நேஷன் பாஜக 290 இடங்களைக் கைப்பற்றும் என்றும், நியூஸ் எக்ஸ் பாஜக கூட்டணி 242 இயங்களைக் கைப்பற்றும் என்று கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவருமான ஒமர் அப்துல்லா, "ஒவ்வொரு கருத்து கணிப்புமே தவறாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், எல்லா சர்வேக்களுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றி எனக் கூறுகிறது.
பேசாமல் டிவியை அணைத்துவைத்துவிட்டு, சமூக வலைதள பக்கங்களை லாக் அவுட் செய்துவிட்டு 23-ம் தேதிக்காக காத்திருக்கலாம். மே 23-ம் தேதி பூமி அதன் அச்சில்தான் சுற்றுகிறதா எனக் காண காத்திருப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.