இந்தியா

வைரலாகும் பனிச் சிறுத்தை புகைப்படம்

செய்திப்பிரிவு

புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த பனிச் சிறுத்தை புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

திறமைகளை அடையாளம் கண்டு பாராட்டுவதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பாரட்டப்பட்டிருக்கிறார் சவுரப் தேசாய் என்ற விலங்கியல் புகைப்பட கலைஞர் .

இவர் பனிச் சிறுத்தை ஒன்றை எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டப்பட்டிருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் பள்ளத் தாக்கில்  பனி மலையில் மறைந்து இருந்து எட்டி பார்க்கும் சிறுத்தை படம் வைரலாகி உள்ளது.

 மலையும், அந்த பனிச் சிறுத்தையும் ஒரே நிறுத்ததில் இருப்பதால் அந்த சிறுத்தையும் கண்டுபிடிப்பது பார்வையாளர்களுக்கும் சற்று கடினமாக உள்ளதுதான் அந்த புகைப்படத்தின் சிறப்பு.

இந்தப் புகைப்படத்தை எடுத்த தேசாயை பலரும் பாராட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT