இந்தியா

மும்பை மருத்துவக் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டாரா?- பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் காயம் இருப்பதாகத் தகவல்

ஏஎன்ஐ

மும்பை பிஎல்ஒய் நாயர் மருத்துவக் கல்லூரியில் பயின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி பாயல் தாட்வியின் மரணத்துக் காரணம் கொலை என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழுத்தில் உள்ள குருதிநாளக்கட்டைவைத்து கொலை என்று தற்காலிகக் காரணத்தை பிரேத பரிசோதனை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று மருத்துவர்களும் நேற்று 2 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர்.

பாயலின் குடும்ப வழக்கறிஞரும் பாயல் தாட்வியின் மரணத்தில் சந்தேகமிருக்கிறது. அது கொலையாகவே இருக்க அதிக வாய்ப்பு என்று கூறியிருக்கிறார்.

பாயலின் குடும்பத்தினர், பாயலின் மரணச் சூழலையும் அவரது உடலில் இருக்கும் காயங்களையும் வைத்துப் பார்க்கும்போது இது கொலையாக இருக்க வேண்டும் என்றே எங்களுக்குத் தோன்றுகிறது. போலீஸாருக்கு குறைந்தபட்சம் 14 நாட்களாவது விசாரணைக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முதலில் பாயலின் உடலை வேறு எங்கோ எடுத்துச் சென்றுவிட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அதனால் தடயங்களையும் அழித்திருக்கவும் வாய்ப்புள்ளது என வழக்கறிஞர் கூரியிருக்கிறார்.

மேலும் அவர், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் சாட்சிகளை அச்சுறுத்துகின்றன. இந்த வழக்கை சரியாக விசாரிக்காவிட்டால் அதனால் சமூக அமைத்திக்கு குந்தகம் ஏற்படலாம். முதலில் போலீஸார் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாட்ஸ் அப் மெசேஜ்களை தீவிரமாக அலச வேண்டும் என்று வாதாடினார்.

ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞரோ, தாட்வி என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பது அந்த மூன்று பேருக்குமே தெரியாது என்று வாதாடினார்.

இந்த வழக்கில் தாட்வியுடன் படித்த பக்தி மெஹ்ரா, ஹேமா அகுஜா, அங்கிதா கண்டேல்வால் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

பாயல் தாட்வி தனது மூன்று சக பெண் மருத்துவர்களால் சாதிரீதியான ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். கழிப்பறைக்குச் சென்றுவிட்டு பாயலின் போர்வையில் கால் துடைப்பது, எச்சில் துப்புவது, வார்த்தைகளால் அசிங்கப்படுத்துவது என்று சொல்லக் கூசும் பல அநாகரிகமான செயல்களில் இறங்கியிருக்கிறார்கள் அந்தப் பெண் மருத்துவர்கள். ‘இடஒதுக்கீட்டில் வந்தவள்’ என்று பிரசவம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றெல்லாமும் வாட்ஸ்அப்பில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். 

SCROLL FOR NEXT