காஷ்மீரில் வெள்ளம் வடிந்து வரும் நிலையில், ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் இருந்து 14 குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து முப்படை வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1.30 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் வெகுவாக வடிந்துவருகிறது. இந்நிலையில், ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் இருந்து 14 குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் இருந்து 29 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிகை மேலும் உயரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.