இந்தியா

உச்ச நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

செய்திப்பிரிவு

பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடர்ந்த வழக்கு விசாரணையின்றி நிலுவையில் இருப்பதால் மனமுடைந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

உறவினர்கள் சிலர் தன்னை கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின்றி நிலுவையில் இருப்பதால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

SCROLL FOR NEXT