இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மும்பையில் விபத்துக்குள்ளானது. விபத்தில், 2 விமானிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை, இந்திய கடற்படைக்குச் சொந்தமான 'சேடக்' ரக ஹெலிகாப்டரில் விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
ஹெலிகாப்டர் ஊரன் பகுதிக்கு மேல் பறந்தபோது, திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், ஹெலிகாப்டரை உடனடியாக விமானி தரையிறக்கினார். அப்போது, விபத்து ஏற்பட்டது. இதில், 2 விமானிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடல்நலன் சீராக இருப்பதாகவும், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.