அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சூஷென் மோகன் குப்தாவுக்கு ஜாமீன் வழங்க இயலாது என டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதுகுறித்து உயரதிகாரிகள் தெரிவித்த விவரம் வருமாறு:
ஹெலிப்டர் பரிவர்த்தனையில் ஈடுபட்டு பண மோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள குப்தாவுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் இன்று காலாவதியாகிவிட்டது. இதற்கு தனியே ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே நீதிமன்ற காவலிலிருந்து குப்தாவுக்கு விலக்கு அளிக்கக் கோரி ஜமீன் மனு வழங்க இயலாது என்று கூறி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தள்ளுபடி செய்தார்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சூஷென் மோகன் குப்தாவை அமலாக்கத்துறை இயக்குநரகம் கடந்த வியாழன் அன்று கைது செய்தது.
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து நாடு திரும்பியபோது ராஜீவ் சக்சேனா என்பவரை இவ்வழக்கை தீர விசாரித்துவரும் விசாரணை ஏஜென்சி கைது செய்தது.
வழக்கின் திருப்பமாக ராஜீவ் சக்சேனா குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இம்மோசடியின் அனைத்து விவரங்களும் வெளியே வந்தன. அவ்வகையிலேயே இம் மோசடி வழக்கில் குப்தாவின் முக்கியமான பங்கும் வெளிச்சத்திற்கு வந்ததாக அரசின் விசாரணை ஏஜென்சி தெரிவித்தது.