இந்தியா

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. லட்சுமண் ராவ் தோபாலே மீது மும்பை போலீஸார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ லக்ட்சுமணராவ் தோபாலே. இவர் மீது 42 வயது பெண் ஒருவர் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் தோபாலே மீது இந்திய தண்டனைச் சட்டன் 376 (பலாத்காரம்), பிரிவு 323, 506 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.வின் நண்பர் ஒருவருக்குச் சொந்தமான கல்லூரியில் வேலைபார்த்து வந்துள்ளார் புகார் கொடுத்துள்ள பெண்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அளித்த புகார் மனுவில்: "எம்.எல்.ஏ. லட்சுமண் ராவ், என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். இது குறித்து வெளியில் சொன்னால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரும் என்றும் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகள் வெளியிடப்படும் எனவும் என்னை மிரட்டினார்" என குறிப்பிட்டுள்ளார்.

பெண் கூறிய புகாரின் பேரில் போலீஸார் எம்.எல்.ஏ தோபாலே மீது பலாத்காரம், காயம் ஏற்படுத்துதல், கிரிமினல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

SCROLL FOR NEXT