அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இரண்டு மணி நேரத்தில் மட்டும் 18 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து தேசிய நில நடுக்க மையம் தரப்பில், ''அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்றிரவு தொடங்கி இன்று (திங்கட்கிழமை) காலை வரை 18 மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தொடர்ச்சியான நிகழ்வின் முதல் நிலநடுக்கம் ஞாயிறு இரவு 11.44 மணிக்கு ஏற்பட்டது. கடைசியாக இன்று காலை 7.37 மணிக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் முறையே 4. 7 முதல் 5.2 ஆகப் பதிவாகின'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடித் தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.