இந்தியா

ஆந்திராவில் ஐ பேட் மூலம் அமைச்சரவைக் கூட்டம்: நாட்டிலேயே முதல்முறை

செய்திப்பிரிவு

நாட்டிலேயே முதன்முறையாக பேப்பர்கள் உபயோகப்படுத்தாமல், ‘ஐ பேட்’ கருவிகள் மூலம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் ஹைதராபாத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர் களுக்கும் நவீன ‘ஐ பேட்’ கருவி கள் வழங்கப்பட்டன. இந்த கருவி கள் மற்றும் பவர் பாயிண்ட் பிரசெண் டேஷன் உதவியுடனும் பேப்பர்களே பயன்படுத்தாமல் சுமார் 4 மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியது: மக்கள் நம்மீது உள்ள நம்பிக்கை யின் பேரில்தான் நம்மிடம் ஆட்சியை ஒப்படைத்து உள்ளனர். இதனை நாம் காப்பாற்றிக்கொள்வது நமது கடமையாகும். கடந்த 100 நாட்கள் ஆட்சி திருப்திகரமாக இருந்தாலும் அமைச்சர்கள் தங்களது பணிகளை மேலும் திறம்பட செய்ய வேண்டும். இனி அரசு தொடர்புடைய எந்த தகவல்களுக்கும் முழுமையாக கணினி, ‘ஐ பேட்’ போன்றவற்றை உபயோகப்படுத்துங்கள்.

இனி படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துறைகளிலும் பேப்பருக்கு பதில் தகவல்கள், கணினி மூலமாக பரிமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் 24 மணி நேரமும் தடையில்லா தரமான மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் தினமும் 20 லிட்டர் குடிநீர் விநியோகம், முதியோர் உதவித் தொகையை அதிகரிப்பது ஆகிய மூன்று அரசு நலத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றார்.

SCROLL FOR NEXT