இந்தியா

பிரதமர் மோடி, அமித் ஷா பேச்சு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

பிடிஐ

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பேசியுள்ள நிலையில், அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நாளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் 146 பக்கங்கல் கொண்ட மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேன் மனு சிங்வி ஆஜராகினார்.

மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் " தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளில், ராணுவ வீரர்கள் குறித்து எந்தவிதமான விஷயங்களையும் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் பேசுவதற்கு தடைவிதித்திருந்தது. ஆனால், இந்த விதிமுறைகளை மீறி, பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் பேசி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரங்களில் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் வெறுப்புப் பேச்சுகளை  பேசியுள்ளனர்.

தங்களுடைய ஆட்சியில்தான் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் தாக்குதல் நடந்ததாக தொடர்ந்து இருவரும் பேசி வருகின்றனர். குஜராத்தில் பிரதமர் மோடி பேசிய பொதுக்கூட்டத்தில் ராணுவம் குறித்து பேசப்பட்டது, பிஹாரின் சீதாமார்ஹி நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவும் நடத்தை விதிமுறைகளை மீறி பேசியுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பல முறை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷா பேசியும், வெறுப்புணர்வை பரப்பும் வகையில் பேசும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் கண்டும் காணததுபோல் செயல்படுகிறது. இதுவரை 40 மனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் செயலுக்கு மாறாக இருக்கிறது.

பாஜக வேட்பாளர்களுக்கு ஒரு நியதி, மற்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஒரு நியதி என்பதுபோன்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்கிறது. திட்டமிட்ட நாங்கள் அளிக்கும் புகார்களுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை.

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதி மீடு 72 மணிநேர தடை விதித்த தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி, அமித் ஷா மீது  எடுக்கவில்லை.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் பல முறை புகார் அளித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆதலால், தேர்தல் ஆணையத்தை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கோகய் இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT