ஏப்ரல் 5ம் தேதி வெள்ளித்திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
தயாரிப்பாளர் சந்தீப் சிங், “பிஎம் நரேந்திர மோடி படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியிடப்படவில்லை. விரைவில் அடுத்த அறிவிப்பு வெளியிடுவோம்” என்று தன் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. வாக்குபதிவுகளின் முதல்கட்டம் இன்னும் ஒருவாரத்தில் நடைபெறவுள்ள நிலையில், பிஎம் நரேந்திர மோடி என்ற படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.
தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இந்த சுயசரிதைப் படத்தை வெளியிட்டால் அது பாஜகவுக்கு சாதகம் செய்வதாக அமையும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
மேலும், தேர்தல் முடியும் வரை இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சந்தீப் சிங் தன் ட்வீட்டில் தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்ததாக அறிவித்துள்ளார்.
முக்கியக் கதாப்பாத்திரத்தில் விவேக் ஓபராய் நடிக்க ஓமங் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.