இந்தியா

பலாத்கார வழக்கில் அசாராம் பாபு மகனுக்கு ஆயுள் தண்டனை

மகேஷ் லங்கா

பாலியல் பலாத்கார குற்றவாளியும் சாமியாருமான அசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு சூரத் நீதிமன்றம் பலாத்காரக் குற்றச்சாட்டு வழக்கில் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

2013-ம் ஆண்டு நாராயண் சாய்க்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் நாராயண் சாய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது சூரத் கோர்ட். நாராயண் சாய் கூட்டாளி 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் அசாரம் பாபு மற்றும் அவரது மகன் தங்களை பலாத்காரம் செய்து துன்புறுத்தல் செய்ததாக போலீஸ் புகார் அளித்தனர்.  அதில் குறிப்பாக ஒரு பெண் 2002 முதல் 2005 வரை நாராயண் சாய் தன்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனையடுத்து நாடு முழுதும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. 2013-ல் நாராயண் சாய் சிக்கினான். இவன் அகமதாபாத் ஆசிரமத்தில் மேலும் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததும் விசாரணையில் அம்பலமானது.

நாராயண் சாய் தந்தை அசாராம் பாபு தற்போது ராஜஸ்தான் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT