இந்தியா

குஜராத்தின் அதிசய வாக்குப்பதிவு மையம்

செய்திப்பிரிவு

குஜராத்தில் இன்று லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. இதில் சுவாரஸ்யமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.  எப்படி இது சாத்தியம்? இதில்தான் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது.

குஜராத்தின் ஜுனாகட் நகரில் கிர் காடு பகுதியில் வாக்கு மையம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.  இங்குள்ள மையத்தில் வாக்களிக்க ஒரே ஒரு வாக்காளரே உள்ளார்.  பரத்தாஸ் பாபு என்ற அந்த முதியவர் இன்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இதன்பின் அவர் கூறும்பொழுது, ஒரு வாக்கிற்காக இந்த வாக்கு மையத்திற்கு அரசு செலவு செய்துள்ளது.  நான் வாக்கு பதிவு செய்து விட்டேன்.  இதனால் இந்த மையத்தில் 100 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது. 

அனைத்து இடங்களிலும் 100 சதவீத வாக்கு பதிவிற்கு, வாக்காளர்கள் அனைவரும் சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT