இந்தியா

112 அவசர கால எண் திட்டத்தில் 20 மாநிலங்கள்

செய்திப்பிரிவு

நாடு முழுவதிலும் அவசர கால தேவைக்கு 112 என்ற ஒரே எண்ணை பயன்படுத்து வதற்கான நெட்வொர்க்கில் இதுவரை 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்கள் இணைந் துள்ளன.

போலீஸ் (100), தீய ணைப்பு (101), பெண்கள் பாதுகாப்பு (1090) உள் ளிட்ட பல்வேறு அவசர கால தேவைகளுக்கும் தற் போது வெவ்வேறு தொலை பேசி எண்கள் பயன்பாட்டில் உள்ளன.

இவற்றுக்கு பதிலாக அனைத்து அவசர கால தேவைக்கும் 112 என்ற ஒரே எண்ணை பயன்படுத்தும் வசதி, மத்திய அரசின் நிர்பயா நிதியில் நடை முறைப்படுத்தப்படு கிறது. அமெரிக்காவில் அனைத்து அவசர கால தேவைக்கும் 911 என்ற ஒரே எண் பயன்பாட்டில் உள்ளது போல் நம் நாட் டிலும் நடைமுறைப்படுத் தப்படுகிறது.

இதற்கான நெட்வொர்க் கில் இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங் கானா, புதுச்சேரி, அந்த மான் நிகோபார் தீவுகள், உள்ளிட்ட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் கள் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

இத்திட்டத்துக்கு மொத் தம் ரூ.321.69 கோடி ஒதுக் கப்பட்டு, இதுவரை ரூ.278.66 கோடி விடுவிக்கப் பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

SCROLL FOR NEXT