காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி யில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள் ளார். இதனிடையே திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு நடந்த மக்கள வைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, 2009 மற்றும் 2014 தேர்தல்களி லும் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் 4-வது முறையாக அமேதி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அதேநேரம், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ராகுல் காந்தி முதல் முறை யாக 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா நேற்று தெரிவித்தார். ராகுலின் சகோதரி யும் உத்தரபிரதேச கிழக்கு பகுதி பொறுப் பாளருமான பிரியங்காவும் அவருடன் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோழிக்கோடு வரும் ராகுல், அங்கிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள வயநாடு நகருக்கு ஹெலிகாப்டரில் செல்ல உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கோழிக்கோடு நகரில் முகாமிட்டுள்ளனர். ராகுலுக்கு உற்சாக வரவேற்பு வழங்க கட்சித் தொண்டர்கள் தயாராகி வருகின்ற னர். ராகுலின் வருகையை ஒட்டி கோழிக் கோடு, வயநாடு மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரத் தர்ம ஜன சேனா கட்சித் தலைவர் துஷார் வெள்ளாபள்ளி போட்டியிடுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
துஷார் வெள்ளாபள்ளிக்கு முதலில் திருச்சூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடு வார் என காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப் பட்டதும், அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை களமிறக்க பாஜக தலைவர் அமித் ஷா திட்டமிட்டார். இதையடுத்து துஷார் வயநாடு தொகுதிக்கு மாற்றப்பட்டார். திருச்சூர் தொகுதியில் பாஜக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
பாஜக நேற்று முன்தினம் இரவு வெளி யிட்ட வேட்பாளர் பட்டியலில் கேரளா வைச் சேர்ந்த ஒருவரும் குஜராத் தைச் சேர்ந்த இருவரும் இடம்பிடித் துள்ளனர். இதில் மலையாள நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபி (திருச்சூர்), சாரதா பென் படேல் (மேசனா) மற்றும் தர்ஷனா ஜர்தோஷ் (சூரத்) ஆகிய 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இத்துடன் பாஜக சார்பில் இதுவரை 377 வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
திருச்சூர் தொகுதியில் இடதுசாரி ஜன நாயக முன்னணி சார்பில் ராஜாஜி மேத்யூ தாமஸும் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார் பில் டி.என்.பிரதாபனும் போட்டியிடுகின்ற னர். இவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் சுரேஷ் கோபி களமிறக்கப்பட்டுள்ளார்.