தமிழக எல்லையை ஒட்டிய கேரளப் பகுதியில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமளிக்காமல் விழிப்புடன் இருக்குமாறு போலீஸாருக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டிய கேரளப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காக்கும் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அம்மாநில காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா உத்தரவிட்டுள்ளார்.