கூகுள் மேப் உதவியுடன் ஹைதராபாத் நகரில் 56 பழைய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத் நகரில் பழைய குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறை நகர துணை ஆணையர் சத்யநாராயணா தலைமையில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் 350 போலீஸார் திங்கள் கிழமை இரவு முதல் விடிய விடிய நகரின் மையப்பகுதியில் உள்ள மங்கோர் பஸ்தி எனும் பகுதியில் வீடு வீடாக சோதனை நடத்தினர்.
கூகுள் மேப் உதவியுடன் பழைய குற்றவாளிகளைத் தேடினர். இதில் அதிகமாக பெண் குற்றவாளிகள் சிக்கினர். மேலும் சில ஆண் குற்ற வாளிகளிடமிருந்து மோட்டர் பைக், நகை, பணம் போன்றவற் றையும் பறிமுதல் செய்தனர். இதில் ஒரு பெண் குற்றவாளியை பிடிக்க போன போது அவர் போலீ ஸாரைக் கண்டு தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக் குளிக்க முயன்றுள்ளார். அவரை மகளிர் போலீஸார் சாமர்த்தி யமாக தடுத்து கைது செய்தனர்.
கூகுள் மேப் உதவியுடன் தலைமறைவாக உள்ள பழைய குற்றவாளிகள் அனைவரை யும் கைது செய்வோம் என துணை ஆணையர் சத்ய நாராயணா செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.