இந்தியா

வங்கி பியூனுக்கு ரூ.7 கோடி சொத்து: சோதனை நடத்திய போலீஸார் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேசத்தில் லஞ்ச புகா ருக்கு உள்ளான கூட்டுறவு வங்கி உதவியாளர் (பியூன்) வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க் கிழமை சோதனை நடத்தினர்.

சுமார் 30 ஆண்டுகளாக பியூ னாக உள்ள அவர் கோடிக்கணக் கான ரூபாய்க்கு சொத்துகளை வாங்கி குவித்திருப்பது தெரிய வந்தது. மாதம் 20 ஆயிரம் கூட சம்பளம் வாங்காத அவர் இவ் வளவு சொத்துகளை குவித்திருப் பது போலீஸாரை பெரும் வியப் பில் ஆழ்த்தியுள்ளது. அவர் வேறு எந்த லாபகரமான தொழில் செய்வ தாகவும் தெரியவில்லை. பரம்பரை சொத்து எதுவும் அவருக்கு பெரிய அளவில் இல்லை. எனவே வங்கிப் பணியில் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடு மூலம்தான் இவ்வளவு பணம் சேர்த்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

குல்தீப் யாதவ் என்ற அந்த நபர் 1983 முதல் பியூனாக பணியாற்றி வருகிறார். ஒருமுறை கூட பணி உயர்வு பெறவில்லை.

குவாலியரில் அவருக்கு சொந்த மான 3 வீடுகளில் சோதனை நடத்தப் பட்டது. அந்த வீடுகளின் மதிப்பு மட்டும் ரூ.3 கோடியாகும். இது தவிர ஒரு பங்களாவும் மேலும் இரு வீடுகளும் அவருக்கு உள்ளன. இரு சொகுசு கார்களையும் அவர் வைத்துள்ளார். வங்கி லாக்கரில் ஏராளமான பணமும், நகையும் உள்ளது. இதுவரை முடிவடைந்த கணக்கின்படி அவருக்கு ரூ.7 கோடிக்கு சொத்து உள்ளது. தொடர்ந்து சொத்துகள், நகைகளை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT