இந்தியா

திருவனந்தபுரத்தில் ஈவிஎம் பற்றி ‘பொய் புகார்’ கூறியவர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் 2019-ல் இன்று கேரள தேர்தலில் திருவனந்தபுரத்தில் ஈவிஎம் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு இருப்பதாக பொய் புகார் அளித்ததாக 21 வயது நபர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

எபின் பாபு என்ற வாக்காளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 177ம் பிரிவின் கீழ் பொய் புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் புகார் அளித்தவுடன் ஈவிஎம் எந்திரம் சோதனை செய்யப்பட்டதில் இவர் பொய் புகார் எழுப்பியது தெரியவந்துள்ளது.

இவர் மீது மேல் நடவடிக்கைகள் காத்திருக்கின்றன. ஆனால் இவர் மீது வழக்கு தொடர்ந்ததற்கு காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் விமர்சனம் வைத்தனர்.

திருவனந்தபுரத்தில் வாக்குசாவடியில் தன் வாக்கைப் பதிவு செய்த எபின் பாபு, ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் தான் வாக்களித்த வேட்பாளருக்கு வாக்குப் பதிவாகவில்லை  என்று புகார் அளித்தார்.

உடனடியாக தேர்தல் அதிகாரிகள் சோதனை வாக்களிப்பு முறையில் சோதித்துப் பார்த்தனர், ஆனால் எல்லாம் சரியாகவே வந்தது, இதனையடுத்து பொய் புகார் கூறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT