இந்தியா

பாஜக தலைவர் வீட்டில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்

ஏஎன்ஐ

பீகாரில் பாஜக தலைவர் வீட்டின் மீது நேற்று (புதன்கிழமை ) மாவோயிஸ்டுகள் டைனமைட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கயா நகர மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் மிஷ்ரா ஏஎன்ஐயிடம் தொலைபேசியில் தெரிவிக்கையில், கயாவில் உள்ள பாஜக தலைவர் அனூஜ் குமார் வீட்டின்மீது 20-30 நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் வந்து தாக்கியுள்ளனர்.

அவர் வீட்டின் மீது டைனமைட் வெடிகுண்டு வீசி இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், சம்பவத்தின்போது வீட்டில் யாருமில்லை. அதனால் உயிரிழப்புகள் ஏதுமில்லை'' என்றார்.

வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, மாவோயிஸ்டுகள் வரவிருக்கும் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவிக்கும் சுவரொட்டி ஒன்றை விட்டுவிட்டுச் சென்றனர்.

அப்பகுதியில் உள்ள நக்சல்களின் ஹிட் லிஸ்ட் பட்டியலில் ஒருங்கிணைந்த ஜனதா தளக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ அனூஜ் குமார் பெயரும் தற்போது இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT