ஜம்மு-காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தின் அருகே உள்ள மெந்தர் நிலையத்தில் திங்கள் அன்று இரவு தீடீரென வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு அலுவலகத்தின் சுமைதூக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வெடிப்புச் சம்பவத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
எல்லையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பு எவராலும் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.