திருப்பதி: ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து திருப்பதி நோக்கி நேற்று கர்நாடக மாநில அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே, நாயுடு பேட்டை வெள்ளகூரு மண்டலம், செம்படி பாளையம் எனும் இடத்தில் முன்னால் மர லோடுடன் சென்ற லாரியின் பின்புறம் இந்த பேருந்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 16 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நாயுடுபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.