நிதின் நபின் | ராம் நாத் தாக்கூர் | அபிஷேக் மனு சிங்வி |
புதுடெல்லி: பாஜக தலைவர் நிதின் நவீன், மத்திய அமைச்சர் ராம் நாத் தாக்கூர், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உட்பட 16 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
பிஹார், அசாம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட மற்றும் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட 16 பேர் நேற்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களில் 8 பேர் பாஜக.வைச் சேர்ந்தவர்கள். 3 பேர் தே.ஜ. கூட்டணியைச் சேர்ந்தவர்கள். 5 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
பிஹார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிதின் நவீன் பாஜக தேசிய தலைவரானார். அவர் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார். மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் ராம் நாத் தாக்கூரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
இவர்கள் தவிர உபேந்திர குஷ்வா (ஆர்எல்எம்), ஷிவேஸ் குமார் (பாஜக), தெராஸ் கோவாரா(பாஜக) உட்பட 16 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.