இந்தியா

ஒடிசா மாநிலத்தில் 2 தேர்தலிலும் காங்கிரஸுடன் ஜேஎம்எம் கூட்டணி

செய்திப்பிரிவு

ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை ஆகிய 2 தேர்தலிலும் காங்கிரஸுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) கூட்டணி அமைத்துள்ளது.

ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல், 4 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அங்கு பல்வேறு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன.

ஒடிசாவை பொறுத்தவரை, அங்கு ஆளும் பிஜு ஜனதா தளம், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸுடன் ஜே.எம்.எம். கட்சி கூட்டணி அமைத்துள்ளது. எனினும், அவற்றுக்கு இடையே தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்படவில்லை.

எனினும், ஜேஎம்எம் கட்சியின் தலைவர் சிபு சோரனின் மகளான அஞ்சனி, மயூர் பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என ஜே.எம்.எம். தலைமை அறிவித்துள்ளது.

          
SCROLL FOR NEXT